உறைவிட பள்ளிகளில் இரவில் தங்காதது ஏன்? மாணவர்களுக்கு சித்தராமையா கேள்வி
பெங்களூரு: ஆதிவாசி பழங்குடியின மாணவர்கள் இரவில் உறைவிட பள்ளிகளில் தங்குவதில்லை. மாணவர்கள் இரவு உணவு சாப்பிட்ட பின், அவர்களை வீட்டுக்கு செல்வது ஏன்? என முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.லோக்சபா தேர்தல் முடிந்த பின், துறைவாரியாக முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த வரிசையில், எஸ்.சி., எஸ்.டி., துறை தொடர்பாக, பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.ராஜினாமாஅத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில் 187 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், சில நாட்களுக்கு முன்பு, ராஜினாமா செய்தார். இதையடுத்து, எஸ்.சி., - எஸ்.டி., துறை கூடுதல் தலைமை செயலர் மஞ்சுநாத் பிரசாத், முதல்வரின் கூடுதல் தலைமை செயலர் அதீக் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:எஸ்.சி., எஸ்.டி., துறைக்கு கடந்தாண்டு, 1,884.01 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 1,879.35 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் ஆய்வுமாணவர்கள் தங்கும் ஹாஸ்டல்களில், மாலை வேளைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, துாய்மை கிட்கள், உணவு பதார்த்தங்கள் முறையாக வினியோகிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.சில ஆதிவாசி பழங்குடியினர் உறைவிட பள்ளிகளில், இரவு வேளையில் மாணவர்கள் இருப்பதில்லை. மாணவர்கள் இரவு உணவு சாப்பிட்ட பின், அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.அனைத்து வசதிகளும் இருந்தும், வீட்டுக்கு அழைத்துச் செல்வது ஏன்?இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். ஆதிவாசி பழங்குடியின மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தப்பட வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.மற்றவர்களை போன்று, அந்த மாணவர்களுக்கும், ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த வேண்டும். நிதி இருக்கிறது என்று, தேவை இன்றி, படுக்கைகள், போர்வைகள் வாங்கக் கூடாது. நன்றாக படிப்பவர்களை மட்டும் கவனிக்காமல், கல்வியில் பின் தங்கியவர்களையும் நன்றாக படிப்பவர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.