உள்ளூர் செய்திகள்

நாளை பூமியை கடக்கும் விண் பாறைகள்: ஆபத்தில்லை என்கிறது நாசா!

புதுடில்லி: நாளை பூமியை கடந்து செல்லும் 6 விண் பாறைகளை கண்டறிந்துள்ள நாசா, இந்த பாறைகளால் ஆபத்து எதுவும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.அண்டவெளியில் ஏராளமான நட்சத்திரங்கள், சிறு கோள்கள், பாறைகள் ஏராளமாக உள்ளன. பூமியுடன் நேரடியாக தொடர்பற்றவையாக அவை இருந்தாலும், அவற்றின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.அத்தகைய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள், நாளை 6 விண் பாறைகள் பூமியை கடந்து செல்லும் என்று கூறியுள்ளனர்.இந்த பாறைகள் நமது சூரிய குடும்பத்தின் ஆரம்பகால உருவாக்கத்திலிருந்து வந்தவை. அவை சூரியனைச் சுற்றி வரும் சிறிய, ஒழுங்கற்ற வடிவ பொருள்களாக உள்ளன. செவ்வாய் மற்றும் வியாழன் இடையே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.தற்போது பூமிக்கு அருகே வரும் பாறைகள், பூமியிலிருந்து தோராயமாக 0.017 வானியல் அலகுகள் அல்லது சுமார் 2.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.இந்த பாறைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. அவற்றின் விட்டம் 18 முதல் 41 மீட்டர் வரை இருக்கும். இது வினாடிக்கு 6.9 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.தற்போது இந்த பாறைகள், பூமியில் இருந்து 4.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இந்த பாறைகளால் ஆபத்தில்லை என்றாலும், அதனை தொடர்ந்து கண்காணிப்பது விண்வெளியின் மாறும் சூழலை நன்கு புரிய உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்