உள்ளூர் செய்திகள்

கல்வி அலுவலக கட்டடத்தில் தீ பழைய புத்தகங்கள் தீக்கிரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலக பழைய கட்டடத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.திருநெல்வேலி டவுன், மாநகராட்சி ஆர்ச் பகுதியில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலகம் செயல்பட்டது. அதன் புதிய அலுவலகம், பேட்டை காமராஜர் மாநகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டது.ஓராண்டாக கவனிக்கப்படாமல் கிடந்த பழைய கட்டடத்தில், நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் இருந்த பழைய புத்தகங்கள், பொருட்கள் இந்த விபத்தில் தீக்கிரையாகின. போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்