சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு முடிவு; கோவையில் பல பள்ளிகள் சென்டம்
கோவை : சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாயின. கோவையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான சி.பி.எஸ்.இ.,பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.கோவையில், 29 தேர்வு மையங்களில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 26 மையங்களில் தேர்வு எழுதினர். நேற்று வெளியான முடிவுகளின்படி, பெரும்பாலான பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.* யுவபாரதி பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் 110 மாணவர்கள், பத்தாம் வகுப்பில் 127 மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்று, நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அதிகபட்சம் 490 மற்றும் பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் பெறப்பட்டுள்ளன.* சுகுணா பிப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் 490; பத்தாம் வகுப்பில் 494 எனப் பெறப்பட்டு, 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. பிளஸ் 2வில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேட்டிவ் பிராக்டீஸ் உள்ளிட்ட பாடங்களில், 24 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.* சந்திரகாந்தி பள்ளி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. பிளஸ் 2வில் 492, பத்தாம் வகுப்பில் 494 முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.* நேஷனல் மாடல் பள்ளியில், பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்ட 142 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது.* தி கேம்ப்போர்ட் சர்வதேச பள்ளியில், பொருளியல், உளவியல், வேதியியல், பிசினஸ் ஸ்டடீஸ், இன்பர்மேட்டிக் ப்ராக்டீஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் 9 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.* என்.ஜி.பி.,பப்ளிக் பள்ளியில் பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சியுடன், 90 மதிப்பெண்களுக்கு மேல் 26 சதவீத மாணவர்களும், 80 மதிப்பெண்களுக்கு மேல் 61 சதவீத மாணவர்களும் பெற்றுள்ளனர். அதேபோல், 10ம் வகுப்பில் 74 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.