ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் போலி முன்னுரிமை சான்றுகளா? கல்வித்துறை விசாரணை
மதுரை: அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய் வில், சில மாவட்டங்களில் போலி முன்னுரிமை சான்று சமர்ப்பித்து, ஆசிரியர்கள் சிலர் இடமாறுதல் பெற்றதாக சர்ச்சையாகியுள்ளது.இந்தாண்டு ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஜூலையில் நடந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் மாவட்டத்திற்குள், வெளி மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஆசிரி யர்கள் தேர்வு செய்தனர். இதற்கு முன்னுரிமை அடிப்படையில், கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர்.இதன்படி மாற்றுத்திறனாளி, மாற்றுத்திறன் குழந்தைக்கான பெற்றோர், ஐந்து ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர் உள்ளிட்ட அடிப்படையில் மாநில அளவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், மாற்றுத்திறனாளி குழந்தைக்கான பெற்றோர் என்ற போலி சான்று பெற்று, முன்னுரிமையில் பணிமாறுதல் பெற்றார். இதுகுறித்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், அவரை அந்த பள்ளியில் இருந்து மாற்றினர்.இதுபோல, போலி முன்னுரிமை சான்றிதழ் தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்று சென்றுள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முன்னுரிமை தகுதியுள்ள ஆசிரியர்கள் அதற்கான சான்றிதழ்களை 'எமிஸ்' மூலம் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்பதிவேற்றத்தில் சி.இ.ஓ., ஒப்புதல் அளிப்பதற்கு முன், சீனியாரிட்டி சேலஞ்ச் என்ற ஒரு வசதி உள்ளது.இதன்படி முன்னுரிமை சான்று பதிவேற்றத்தில் ஏதாவது தவறு நடந்தால் அதை திருத்தம் செய்துகொள்ளலாம்.இந்த சீனியாரிட்டி சேலஞ்ச் வசதியை பயன் படுத்தி சில மாவட்டங்களில் போலி முன்னுரிமை சான்றுகளை சிலர் பதிவேற்றம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து முன்னு ரிமை அடிப்படையில் மாறு தல் பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளது.