உள்ளூர் செய்திகள்

இது வேறு - அது வேறு: உச்ச நீதிமன்றம்

ஒரு கல்வி நிறுவனத்தை நடத்துவதில் ஒருவருக்கு இருக்கும் உரிமையும், அடிப்படை கல்வி பெறுவதில் ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமையும் ஒன்றோடொன்று முரண்பட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்வி உரிமை சட்டம் தனியார் பள்ளிகளை பாதிக்கிறது என்ற வகையில் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனம் நடத்த ஒருவருக்கு இருக்கும் உரிமையும், சமூகத்தில் பின்தங்கிய ஒரு குழந்தைக்கு இருக்கும் அடிப்படை கல்விக்கான உரிமையும் ஒன்றுக்கொன்று முரண்பட முடியாது. நாம் அந்த இரண்டு அம்சங்களுக்கும் இடையில் எவ்வாறு சமன் செய்கிறோம்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கல்வி உரிமை சட்டத்தில் ஏழை குழந்தைக்கு அடிப்படை கல்வி வழங்குவதை நேர்மறை விளைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்