உள்ளூர் செய்திகள்

நிலநடுக்கம் என நினைத்து ஜன்னலில் இருந்து குதித்த மாணவிகள் 8 பேர் படுகாயம்

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பள்ளியின் முதல் மாடி ஜன்னலில் இருந்து குதித்த 8 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 350 கி.மீ துாரத்தில் இருக்கும் கானேவால் மாவட்டத்தின் ஜஹானியனில் உள்ள அரசு பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து லாகூரில் உள்ள மீட்பு குழுவினர் கூறுகையில், ஜஹானியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இருந்தனர். அப்போது, ​​​​அவர்கள் அதிக சத்தத்துடன் அதிர்வுகளை உணர்ந்தனர். சாலை கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக பள்ளிக்கு அருகில் ரோடு ரோலர் இயங்கியதால் இடிமாதிரி சத்தம் கேட்டிருக்கிறது.வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால், நிலநடுக்கம் ஏற்பட்டு, மேற்கூரை இடிந்து விழுந்துவிடுமோ என்று மாணவிகள் பீதியடைந்தனர். பல மாணவிகள் கீழே வேகமாக இறங்கியபோது, ​​அவர்களில் 8 பேர் பயத்தால், முதல் மாடி ஜன்னல் வழியாக குதித்ததால், பலத்த காயம் அடைந்தனர்.காயமடைந்த மாணவர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு 3 பேரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.இவ்வாறு மீட்பு குழுவினர் கூறினர்.பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, காயமடைந்த சிறுமிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்