ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினம் பிளஸ் 1 மாணவிகள் ஆதங்கம்
அன்னுார்: ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவியர் தெரிவித்தனர்.அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில், பிளஸ் 1 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . நேற்று, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு ஆங்கில பாடத் தேர்வு நடந்தது.தாரணிகா, குன்னியூர்: ஆங்கில பாடத்தில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.நந்தினி, ஆனையூர்: ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறுவது மிக எளிது. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன.மூன்று கேள்விகளில், இரண்டுக்கு மட்டும் பதிலளிக்கும் கேள்விகளிலும் தெரிந்த கேள்விகளே வந்திருந்தன. 90க்கு 60 மதிப்பெண் எளிதாக பெற முடியும்.