அடுத்த ஆண்டில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு
மத்திய, மாநில, அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிள், பல்கலைக்கழகங்களுக்குப் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சந்திரமெளலி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அடுத்த கல்வியாண்டில் இருந்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்ம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இது குறித்த விவரக்ளை இணையதளத்தில் வெளியிட்டும், பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டும் மேற்கொண்டு முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.