உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு முத்தான ஆலோசனை

அதிக மதிப்பெண்கள் பெற வல்லுனர்கள் கூறிய அறிவுரைகளை கேட்டு ஏராளமான மாணவ, மாணவியர் பயனடைந்தனர். சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களையும், வெற்றிக்கான ‘டிப்ஸ்’களையும் வழங்கினர். எஸ்.எஸ்.எல்.சி., : ஆங்கிலம் - புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.ஜோதிமதி: சரியாக படிக்காத மாணவர்கள் கூட ஆங்கிலத்தை தன்னம்பிக்கையுடன் படித்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம். ஆங்கிலம் முதல் தாளில் 3 பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும். ஒரே ஒரு பாடக்கட்டுரையை மட்டும் படித்து விட்டு செல்ல கூடாது. எட்டு பாடங்களை தேர்வு செய்து அதில் மூன்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அத்துடன் சிறு கேள்விகளுக்கு விடையளித்தால் அதிக மதிப்பெண் எடுத்து விடலாம். ஆங்கிலம் இரண்டாவது தாளில் கடிதம் எழுதுவது, நோட் மேக்கிங், டெவலப்பிங் ஹின்ட்ஸ் போன்றவைகளுக்கு பதிலளித்தால் போதும். கணக்கு - அவனியாபுரம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் எஸ்.கிறிஸ்டோபர் ஜெயசீலன்: முதலில் வரைபடம், புள்ளியியல், ஜியாமெட்ரி கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும். அல்ஜீப்ரா, முக்கோணவியல், நம்பர் தியரி போன்றவைகளில் கணக்குகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். வடிவியலில் தேற்றங்களை எழுதி பார்க்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் பார்முலாக்களை குறிப்பிட வேண்டும். அறிவியல் - மதுரை கல்லூரி மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜி.மருதமுத்து: அறிவியல் பாடத்தில் தேர்வு செய்து முக்கிய 12 பாடங்களை படிக்க வேண்டும். கெமிக்கல் சமன்பாடுகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். வேதியியலில் அலுமினியம், இரும்பு பிரித்தெடுத்தல், கந்தகம் தயாரிக்கும் முறை குறித்து தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் படங்கள் வரைய வேண்டும். சமூக அறிவியல் - டி.வி.எஸ்., சுந்தரம் மேல்நிலை பள்ளி ஆசிரியை ஹேமா பிரபா: வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் பிரிவுகளில் எந்தந்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு முறை எழுதி பார்த்தால் பதில்கள் நினைவில் நிற்கும். தேர்வுக்கு எப்படி தயார் செய்துகொள்கிறோம், எவ்வாறு தேர்வை எழுதுகிறோம் என்பதை பொறுத்து அதிக மதிப்பெண் பெறலாம். வரலாறு<< வரைபடத்தில் முக்கிய நகரங்கள், எல்லைகள் மற்றும் புவியியலில் ஆறுகள், நதிகள், கடல் போன்றவைகளை அறிந்து கொள்ள வேண்டும். மெட்ரிக்: ஆங்கிலம் - சி.இ.ஒ.ஏ., மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆர்.பழனிவேல்ராஜன்: ஆங்கிலம் முதல் தாளை பொறுத்து 8 பாடங்கள், 4 பாடல்களை படித்தால் போதும். கட்டுரைகளை எழுதி பார்க்க வேண்டும். வார்த்தைகளை அமைத்தல், காலியிடங் களை நிரப்புவதுபோன்றவைகளை செய்து பார்க்க வேண்டும். இலக்கண பிரிவை நன்றாக எழுதினால் 24 மதிப்பெண் பெறலாம். 2வது தாளை பொறுத்து துணைப்பாடம் பகுதியை அடிக்கடி படித்தால் 40 மதிப்பெண் எடுக்கலாம். கணிதம் - அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியை ஏ.பிரபாராணி: முதல் தாளில் அப்ஜெக்டிவ் கேள்விகளுக்கு புத்தகத்தின் பின்பகுதியிலுள்ள கேள்விகளை அடிக்கடி படித்தால் போதும். கிராப் தவறாமல் வரையவேண்டும். அல்ஜீப்ரா, மென்சூரேஷன், டிரிக்கானமெட்ரி போன்ற பிரிவுகளை எழுதி பார்த்திருந்தாலே அதிக மதிப்பெண் பெறலாம். வேதியியல் - தொண்டி அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி ஆசிரியை சாந்தலட்சுமி: காப்பர், இரும்பு தயாரிக்கும் முறைகளில் படங்கள் வரைய வேண்டும். அதிக மதிப்பெண் கேள்விகளில் முக்கிய வார்த்தைகளை வேறுபடுத்தி காட்ட வேண்டும், சுற்றுச்சூழல், மக்கள்தொகை பெருக்கம் போன்ற பாடங்களில் இருந்து அவசியம் கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல் - மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியை வெங்கடம்மாள்: மெக்கானிக்கல், ஒளி, எலக்ட்ரிசிட்டி, மாடர்ன் பிசிக்ஸ் போன்ற பிரிவு பாடங்களை படித்தால் போதும். அப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் அதிகம் கேட்க வாய்ப்புண்டு. உபகரணங்கள் குறித்து வரைபடங்கள் வரைய வேண்டும். கேள்விகளை கவனமுடன் தெரிந்து உரிய பதிலளிக்க வேண்டும். தாவரவியல் மற்றும் விலங்கியல் - சி.இ.ஒ.ஏ., மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் டி.கணேசன்; தாவரவியலில் ‘ரி புரடக்ஷன் பிளான்ட்’, ‘சுற்றுப்புற சூழல்’, விலங்கியலில் ‘லெவல் ஆப் ஆர்க்கானிசம்’, ‘அப்ளையடு எம்பிரியோலஜி’, ‘சுற்றுப்புற சூழல்’ பிரிவு பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். தாவிரவியலில் 16, விலங்கியலில் 15 வரைபடங்கள் உள்ளன. அதனை தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் அதில் ஒரு வரைபடம் கேட்கப்படும். பிளஸ் 2: மனநலம் - கல்லூரி பேராசிரியர் கண்ணன்: பொது தேர்வுக்கு தயார் செய்ய வேண்டி மாணவர்கள் இங்கு வந்துள்ள முனைப்பை பார்க்கையில் வெற்றி நிச்சயம். இன்று முதல் தேர்வுக்கு தயாரானால் போதும். இங்கு வந்துள்ள ஆசிரியர்கள் பொது தேர்வு கேள்வித்தாள்களை தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றவர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்கையில் ஆங்கில புலமையைஎதிர் பார்க்கின்றனர். ஆங்கில திறனை வளர்த்து கொள்ளுங்கள். உடலும், மனமும் நன்றாக இருக்க வேண்டும். தினமலர் நாளிதழ் பெற்றோர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு டி.வி.ஆர்., வெள்ளி பதக்கத்தை வழங்கி வருகிறது. எஸ்.ஆர்.எம்., பல்கலை., மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் நிறுவனத்தில் எந்த படிப்பில் சேரவும் அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இவற்றை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆங்கிலம் - மதுரை கல்லூரி மேல்நிலை பள்ளி ஆசிரியர் குகன்: ஆங்கிலத்தில் எழுத்துக்களை அழகாகவும், வார்த்தைகளை புரியும்படியும் எழுதினால் மதிப்பெண் பெறலாம். அடித்தல், திருத்தல் கூடாது. பாட கட்டுரைகளை சொந்தமாக எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும். இரண்டாவது தாளில் கடிதம் எழுதுதல், பத்தி சுருக்குதல் போன்றவைகளை தவறாமல் எழுத வேண்டும். கடிதத்தை படிப்படியாக எழுத வேண்டும். ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் உண்டு. கணக்கு -  டி நோபிலி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆர்.சந்திரசேகரன்: கேள்விகளுக்கு விடையளிக்கையில் பார்முலாக்களை குறிப்பிட வேண்டும். 11 பாடங்களையும் முழுமையாக படித்தால் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ‘அல்ஜீப்ரா’, ‘மேட்ரிக்ஸ்’, ‘காம்பளக்ஸ் நம்பர்’, ‘அனாலிடிகல் ஜியாமெட்ரி’ பகுதிகளை படித்தால் 130 மதிப்பெண் பெற வாய்ப்புள் ளது. முதலில் 10 மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுதவும். பிறகு மற்ற கேள்விகளுக்கு விடை எழுதவும். இயற்பியல் - சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ஜி.குருபாலன்: காஸ் விதிகளின் பயன்பாடு, ஏசி ஜெனரேட்டர், சோக்குகள், லேசர், கேபாசிட்டர் போன்ற பிரிவுகளில் 10 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். மில்லிகன்ஸ் சோதனை போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க 20 நிமிடங்கள் ஆகும். இவற்றை சாய்ஸ் கேள்விகளாக வைத்து கொள்ள வேண்டும். 2 மற்றும் 8வது பாடங்களில் இருந்து ‘காம்பவுண்ட் பிராப்ளம்’ கேட்கப்படும். அதனை படிப்படியாக எழுதி யூனிட்டுடன் விடைகளை குறிப்பிட வேண்டும். வேதியியல் - குறித்து தொண்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் சீனிவாசன்: பிசிக்கல், இன்ஆர்க்கானிசம், ஆர்க்கானிசம் கெமிஸ்ட்ரி பிரிவுகளில் முக்கிய கேள்விகளுக்கான விடைகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். குரோமியம், காப்பர், துத்தநாகம் தயாரிப்பது, தங்கம் மற்றும் வெள்ளி பிரித்தெடுப்பது, வேதி சமன் நிலை, தெர்மோடைனமிக் போன்றவற்றில் இருந்து 10 மதிப் பெண் கேள்வி கேட்கப்படலாம். கார்ப்போ ஹைட்ரேட் வகைப்பாடு, நியூக்கிலியர் ரியாக்டர், கெமிக்கல் ரியாக்டர் வேறுபாடு போன்ற கேள்விகளை தெரிந்திருக்க வேண்டும். உயிரியல் - சி.இ.ஒ.ஏ., மெட்ரிக்., மேல்நிலை பள்ளி ஆசிரியர் டி.கணேசன்: தாவரவியலில் மலரின் வகைப்பாடு, படங்களை அறிந்து கொள்ள வேண்டும். பிளான்ட் øகாலஜி, பிளான்ட் அனாடாமி பிரிவுகளை படித்தால் விடை எழுத முடியும். விலங்கியலில் மனித சைக்காலஜி கடினமான பகுதி. இதனை படித்தால் 10 மதிப்பெண் கேள்வி வரும். சுற்றுச்சூழல் அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மைக்ரோபயாலஜி போன்ற பிரிவுகளில் கேள்விகள் அதிகம் கேட்க வாய்ப்புகள் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்