உள்ளூர் செய்திகள்

திறந்தநிலை பல்கலை நூலகத்திற்கு விரைவில் சூரிய மின்சக்தி

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சூரிய மின்சக்தியில் இயங்க உள்ளது. பல்கலையின் ஏழு மாடி கட்டடத்தில், ஏழாவது மாடியில் உள்ள நூலகம், சூரிய மின் சக்திக்கு மாறுகிறது. பள்ளி, கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்கள், கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 2002ல் துவங்கப்பட்டது. பல்கலைக்கழகம் மூலம், இளங்கலை, முதுகலை, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சமுதாய கல்லூரிகள் வாயிலாக தொழில்நுட்ப படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கல்வி கற்கின்றனர். திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் ஏழாவது மாடியில், நூலகமும் செயல்படுகிறது. இந்த நூலகத்திற்கு தேவையான மின்சாரத்தை, ‹ரிய ஒளி மின் உற்பத்தி மூலம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவாளர் முருகன் (பொறுப்பு) கூறுகையில், "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், சூரிய மின்சக்தி அமைக்க, 12 லட்ச ரூபாயில் திட்ட முன்வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. பணிகள் ஓரிரு வாரத்தில் துவங்கப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்