உள்ளூர் செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் உதவி சிறப்பு அதிகாரி பொறுப்பேற்பு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரசு நியமித்த டி.ஆர்.ஓ., உதவி சிறப்பு அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட குளறுபடிகளால் கடந்த 4ம் தேதி நிர்வாக சிறப்பு அதிகாரியாக ஆணையர் ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து அரசு மேலும் இரண்டு டி.ஆர்.ஓ., பதவி கொண்ட உதவி சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. இதில், தஞ்சாவூர் குருங்குளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உதவி சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். மற்றொரு டி.ஆர்.ஓ.,வான கரூரைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் நேற்று, நிர்வாக சிறப்பு அதிகாரி ஷிவ்தாஸ் மீனா முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்