செவிலியர் பட்டயப்படிப்பு தேர்வு: கால அட்டவணை வெளியீடு
அரசு மற்றும் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில், செவிலியர் பட்டயப்படிப்பு பயில்வோருக்கான, ஆண்டு தேர்வு, வரும், ஜூன் 3ம் தேதி முதல், ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது. புதிய பாடத் திட்டத்தின்படி நடக்கும் இத்தேர்விற்கு, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான, தேர்வு கால அட்டவணை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம், நுழைவுச் சீட்டு, தேர்வுக்கான வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களையும், இந்த இணையதளத்தில் பெறலாம். தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில், செவிலியர் பட்டயப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த, ஆண்டு தேர்வுக்கான முடிவுகளும், சுகாதார துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.