உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்வெட்டர் வழங்க கோரிக்கை

கூடலூர்: கூடலூரில் ஊராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போன்று மாணவிகளுக்கும் அரசின் இலவச ஸ்வெட்டர் வழங்க வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பம், நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பாடப்புத்தம், சீருடை, புத்தக பை மற்றும் படிப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும், அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். குளிர் பிரதேசமான நீலகிரியில் மாணவ மாணவியர் பயனடையும் வகையில் கூடுதலாக ஸ்வெட்டர் வழங்கப்பட்டு வருகிறது. கூடலூர் கல்வி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இவ்வாண்டு ஸ்வெட்டர் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மாணவிகளுக்கு இதுவரை ஸ்வெட்டர் வழங்கப்படவில்லை. தற்போது இப்பகுதியில் தொடர் பருவமழை காரணமாக குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால், குளிரை சமாளிக்க மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். காலநிலையை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கும் அரசின் இலவச ஸ்வெட்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்