உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு பரிசு

புதுச்சேரி: குருசுக்குப்பம் என்.கே.சி., பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது. அரசு பள்ளி அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் படைப்பு, மாநில அளவில் நடக்கும் கண்காட்சியில் இடம் பெறும். இதில் சிறந்ததாக தேர்வு செய்யும் படைப்புகளுக்கு, கல்வித் துறை சார்பில் ஸ்பெயர் விருது வழங்கி, 5000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, குருசுக்குப்பம் என்.கே.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தேர்வுபெற்று, ஸ்பெயர் விருது பெற்ற மாணவன் சத்தியசீலன், சுனில்குமார் ஆகியோருக்கு, பள்ளி துணை முதல்வர் ராமலிங்கம் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்