உள்ளூர் செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

செஞ்சி: செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. செஞ்சி கோட்டை நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் மோகன் குமார் வரவேற்றார். தலைமையாசிரியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தாங்கல்கரை, புலிப்பட்டு, பாக்கம், சத்தியமங்கலம், திக்காமேடு, ஆலம்பூண்டி பள்ளிகளை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவி பேராசிரியர் கவுதம், சைல்டு கேரியர்ஸ் நிறுவனர் நரேஷ்குமார் ஆகியோர் புத்தக பை, பேனா, பென்சில், நோட்டு, ஜாமின்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினர். டூசன் இன்ப்ராகேர் பிரதிநிதி சாசிட் கோலண்டஸ், சைல்டு கேரியர்ஸ் பிரதிநிதிகள் சுமதி, கெஜலட்சுமி, சிலம்பரசன், ஆசிரியர்கள் செல்வகணபதி, ராமநெடுஞ்செழியன், வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். நம்பிக்கை அறக்கட்டளை ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்