உடனடி வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி
திருவள்ளூர்: இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், உடனடி வேலை வாய்ப்புடன் கூடிய, இலவச பயிற்சிக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவள்ளூரில், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அலுவலக பராமரிப்பாளர், பாதுகாவலர் ஆகிய பணிகளுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அலுவலக பராமரிப்பாளர்களுக்கு, ஆறு நாட்கள், பாதுகாவலர்களுக்கு, 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. ஆர்வம் உள்ள ஆண் மற்றும் பெண்கள், இயக்குனர், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 12, ஈக்காடு சாலை (பழைய எஸ்.பி., அலுவலகம்), திருவள்ளூர், தொலைபேசி எண்: 044 27645060, 9444399892 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளுமாறு, அதன் இயக்குனர் புருஷோத்தமன் தெரிவித்து உள்ளார்.