அரசு மேல்நிலைப் பள்ளியில் பொன்விழா கொண்டாட்ட ஏற்பாடுகள்
சொரக்காய்பேட்டை: அரசு மேல்நிலைப் பள்ளியில் பொன்விழா கொண்டாடப்படுவதை அடுத்து, முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும், அதற்கான ஏற்படுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, 1964, ஜூலை 7ல், துவங்கப்பட்டது. இது பொன்விழா ஆண்டு. இதை கொண்டாடும் விதமாக, பள்ளிக்கு பொன்விழா நுழைவாயில் மற்றும் கலையரங்கம், புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தமிழ்த்தாய் சிலையும், இறைவணக்க கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொற்றலை ஆற்றங்கரையில், அமைதியான சூழலில் அமைந்துள்ள, இந்த பள்ளியில் கல்வி கற்று, தற்போது பல்வேறு இடங்களில் பணியாற்றிவரும் முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு நன்கொடை அளித்துள்ளனர். கிராமவாசிகள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன், பள்ளி புதுப்பொலிவு பெற்றுள்ளது. வரும் 10ம் தேதி, பள்ளி வளாகத்தில், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில், பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில், மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை ஒட்டி, பொனவிழா மலர் வெளியிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.