உள்ளூர் செய்திகள்

பாரதி அரசு கல்லுாரி அணி தொடர்ந்து வெற்றி

மயிலாப்பூர்: சென்னையில் நடந்து வரும், அகில இந்திய அளவிலான கபடி போட்டியில், பாரதி அரசு கல்லுாரி அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ராணி மேரி கல்லுாரி சார்பில், அதன் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், அகில இந்திய அளவிலான, ஏ கிரேட் பெண்கள் அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி நடந்து வருகிறது. இதில், 66 மகளிர் அணிகள், விளையாடி வருகின்றன. மயிலாப்பூர், ராணி மேரி கல்லுாரி வளாக கபடி மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது. நேற்று, லீக் போட்டிகள் நடந்தன. இன்று முதல், நாக் - அவுட் போட்டிகள் நடைபெறுகின்றன. நாளை, அரையிறுதி, இறுதி போட்டிகள் நடக்கின்றன. நேற்றைய போட்டிகளில், பாபா ஸ்போர்ட்ஸ் அணி, 39 - 15 என்ற புள்ளிக் கணக்கில், எத்திராஜ் கல்லுாரி அணியை வென்றது. ஐ.எச்.எம்., அணி, ராய் வேலுார் அணியை ஜெயித்தது. மத்திய ரயில்வே அணி, 49-15 என்ற புள்ளிக் கணக்கில், சென்னை மாநகர போலீஸ் அணியை தோற்கடித்தது. மங்களூரு ஆல்வாஸ் அணி, 21-13 என்ற புள்ளிக் கணக்கில், சாய் சென்னை அணியை வீழ்த்தியது. சேலம் அணி, 44-25 என்ற புள்ளிக் கணக்கில், காயிதே மில்லத் அரசு கல்லுாரி அணியை வென்றது. பாரதி அரசு கல்லுாரி அணி, 35-12 என்ற புள்ளிக் கணக்கில், கோவை பாரதி பிரின்டர்ஸ் அணியை வீழ்த்தி, தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், பாரதி கல்லுாரி அணி, செல்லம்மாள் கல்லுாரி அணியை வீழ்த்தியது. கோப்பையை வெல்ல போகும் அணி எது என்பது நாளை மாலை தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்