உள்ளூர் செய்திகள்

தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி வல்லப்பாக்கம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 11 மாணவர்கள்; 25 மாணவியர் என, 36 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்கு, சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பள்ளி வளாகத்தை சுற்றிலும் வேலிகாத்தான் செடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது. பள்ளி வேளைகளில் மாணவ, மாணவியர், இயற்கை உபாதைக்கும் மற்றும் விளையாடும்போதும் வேலிகாத்தான் புதருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த பள்ளிக்கு சுற்றுசுவர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, மாணவ, மாணவியரின் பெற்றோர் எதிர்பார்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்