ரேக்கிங் தடுப்பு குறித்து மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு
மஞ்சூர்: மஞ்சூரில்(நீலகிரி) ரேக்கிங் தடுப்பு குறித்து, மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளிகளில் நடக்கும் ரேக்கிங் தொல்லைகளை தடுக்கும் வகையில், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், எஸ்.ஐ.,கள் சுப்ரமணி, ஸ்ரீதரன் ஆகியோர், மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியரிடம் ரேக்கிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.