பள்ளி மாணவர்களுக்கு தூய்மை தமிழகம் திட்ட போட்டிகள்
சென்னை: தூய்மை தமிழகம் விழிப்புணர்வு திட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு வரும் 10ம் தேதி வரை, போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளிலும், பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஓவிய, பேச்சு, கட்டுரை போட்டிகளும், விளையாட்டு போட்டிகளும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழக அரசு, ’முழு சுகாதார தமிழகம்’ என்ற திட்டத்தை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, வரும், 10ம் தேதி விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.