கிரிக்கெட் போட்டியில் பச்சையப்பன் கல்லுாரி அணி வெற்றி
வேளச்சேரி: கல்லுாரி அளவிலான, கிரிக்கெட் போட்டியில், பச்சையப்பன் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. குருநானக் கல்லுாரி சார்பில், கல்லுாரி அணிகளுக்கு இடையிலான, கல்லுாரி டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. அதன் போட்டி ஒன்றில், முதலில் விளையாடிய பச்சையப்பன் கல்லுாரி அணி, 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லயோலா அணி, 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு, 113 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. பச்சையப்பன் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.