உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான பல்கலை டென்னிஸ் போட்டி நிறைவு

காட்டாங்குளத்தூர்: தேசிய அளவிலான பல்கலை டென்னிஸ் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், தேசிய அளவிலான பல்கலைக்களுக்கு இடையிலான குழு (டீம்) டென்னிஸ் போட்டி, காட்டாங்குளத்தூரில் நடந்தது. எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 3-1 என்ற செட் கணக்கில், உ.பி., அலிகார் முஸ்லிம் பல்கலையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை அணி, 3-1 என, பஞ்சாப் பல்கலை அணியை தோற்கடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்