உள்ளூர் செய்திகள்

மாவட்ட சதுரங்க போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

ராயபுரம்: மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க, விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, பிப். 14, 15ம் தேதிகளில், ராயபுரத்தில் நடக்கிறது. அதில், ஏழு வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவியருக்கு கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர், பிப்., 12ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 94442 85482 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்