உள்ளூர் செய்திகள்

இருட்டில் தவிக்கும் கிராமம்; பள்ளி மாணவர்களுக்கு சிரமம்

ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட, அலேசீபம் அருகே, பாலேபுரம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட மின்சார பம்பு செட்டுகள் மூலம், விவசாயம் நடந்து வருகிறது. கடந்த, இரு நாட்களுக்கு முன்பு, குறைந்த மின் அழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதானதால், இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பாலேபுரம் கிராமம் இருட்டில் தவிக்கிறது. அத்துடன் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !