உள்ளூர் செய்திகள்

‘தடைகள் நிறைந்தது தான் வாழ்க்கை’; நரேன் கார்த்திகேயன்

கோவை: மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கான (சி.ஐ.எஸ்.எப்.,) தன்னம்பிக்கை மேம்பாடு நிகழ்ச்சி கோவை ஏர்போர்ட்டில் நேற்று நடந்தது. பார்முலா, 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பேசியதாவது: தடைகள் நிறைந்தது தான் வாழ்க்கை. நாம் ஒவ்வொருவரும் வல்லுனர். நம் பிரச்னைகளை எளிதில் தீர்க்க நம்மால் முடியும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். வாழ்வில் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக எடுத்து கொள்ள பழக வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பார்முலா கார் பந்தய வீரர் மைக்கேல் சூமேக்கர் தான் என் ’ரோல் மாடல்’. மணிக்கு, 350 கி.மீ., வேகத்தில் கார் ஓட்டுவது சாதாரண விஷயமல்ல. அதற்கான மன உறுதி, தன்னம்பிக்கை வேண்டும். இவ்வாறு, நரேன் கார்த்திகேயன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்