உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்புப் பயிலகங்களில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு படிப்பை நிறைவு செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான சிறப்புத் தேர்வு அக்டோபர் 13ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக் கட்டணம் பாடத்திற்கு ரூ.500. ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ரூ.100 அபராதத் தொகையுடன் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 24ம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களிடம் மாணவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்