உள்ளூர் செய்திகள்

கல்லூரி ஆசிரியர்களுக்கு இ-கன்டன்ட் மேம்பாட்டு பயிற்சி

சென்னை: மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஊடக தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக சென்னப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கு மின் கற்றல் உள்ளடக்க வளர்ச்சி (இ-லேர்னிங் கன்டன்ட் டெவலப்மென்ட்) குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழக  அகடமிக் ஸ்டாப் காலேஜ் மற்றும் அக்சஸ் அட்லாண்டெக் எஜுடெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்பயிற்சி அளிக்கிறது. முதல்கட்டமாக பல்கலைக்கழக வளாகத்தில் சமீபத்தில் நடந்த இந்த பயிலரங்கில் துறைத் தலைவர்கள், மொழி, கலை, அறிவியல், வேலை வாய்ப்பு துறைகளைச் சேர்ந்த முதுநிலை மற்றும் இளநிலை பேராசிரியர்கள் என 130 பேர் பங்கேற்றுள்ளனர். ‘தியரி மற்றும் செயல்முறை என தலா மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவாக நாடு முழுவதிலும் விருப்பமுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படும்’ என சென்னப் பல்கலைக்கழக அகடமிக் ஸ்டாப் காலேஜ் இயக்குனர் கிங்ஸ்லி ஆல்ப்ரெட் சந்திரசேகர் தெரிவித்தார். அக்சஸ் அட்லாண்டெக் எஜுடெயின்மென்ட் நிறுவன தலைவர் ரத்தீஷ் பாபு கூறுகையில், “தொழில்நுட்ப அறிவை ஆசிரியர்களுக்கு வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள் கூற விரும்பும் தகவல்கள் மாணவர்களுக்குச் சரியான முறையில் சென்றடையும். அதன்படி, ஆசிரியர்கள் கூற விரும்பும் பாடங்கள் மிக எளிதான முறையில் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறது. பிறகு, அந்த தகவல்களை மாணவர்கள் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்