உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம்: அரசுப்பள்ளியை பெற்றோர் முற்றுகை

கோபி: காலை உணவு திட்டத்தில் பணியாற்றுபவர்களை மாற்றக்கோரி, குழந்தைகளை அனுப்பாமல், அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால், கோபி அருகே பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் கோபி, காசிபாளையம் அருகே இந்திரா நகரில், பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 42 குழந்தைகள் பயில்கின்றனர். பள்ளியில் காலை உணவு திட்டத்துக்காக, கடந்த, 25ல் இரு பெண்கள் சமையல் செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டனர். இவர்களை மாற்றக்கோரி இந்திரா நகர் மக்களிடம் புகைச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், 12 குழந்தைகள் மட்டுமே, நேற்று பள்ளிக்கு வந்தனர். எஞ்சிய குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பாமல், 50க்கும் மேற்பட்டோர் பள்ளியை நேற்று காலை முற்றுகையிட்டனர். கோபி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படாததால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வந்தார். சத்துணவு பணியாளர்களை கொண்டு, காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளிக்கவே அனைவரும் மாலையில் கலைந்து சென்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்