காந்தி பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டிக்கு அழைப்பு
தேனி: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி அக்.,26ல் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.பள்ளி மாணவர்களுக்கு காலை 10:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கும் துவங்குகிறது. பள்ளி மாணவர்களுக்கு தலைப்புகளாக காந்தி வாழ்க்கை வரலாறு, தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வட்டமேஜை மாநாட்டில் காந்தி என 3 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு காந்தி நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய 4 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தலைமை ஆசிரியர், முதல்வர் பரிந்துரை கடிதத்துடனும் பங்கேற்க வேண்டும்.