உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தேசிய மருத்துவ ஆணையம் கட்டுப்பாடு

தேசிய மருத்துவ ஆணைய இளநிலை மருத்துவ கல்வி வாரிய இயக்குனர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு:பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய முறையை, மத்திய அரசு அமல்படுத்தியது. இது, மருத்துவ கல்வி நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். அதேவேளையில், சில மருத்துவ கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு பின் கூடுதலாக, 10 சதவீத எம்.பி.பி.எஸ்., இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அனுமதிப்பதாக தெரிகிறது.அனுமதிக்கப்பட்ட இடங்களில் உள்ஒதுக்கீடாகவே, 10 சதவீத இடங்களை வழங்க வேண்டும். மாறாக கூடுதல் எண்ணிக்கையில், மாணவர்களை நிரப்புவதை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்