உள்ளூர் செய்திகள்

இளம் சாதனை மாணவருக்கு தேசிய கல்வி உதவித்தொகை

திருவள்ளூர்: இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு, நாடு முழுதும் 30,000 மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.நடப்பாண்டு, https://Scholarships.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும், ஒன்பது மற்றும் பிளஸ் ௧ மாணவ - மாணவியர், தாங்கள் எட்டு மற்றும் 10ம் வகுப்புகளில், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால், National Scholarship Portal- New Registration என்ற இணைப்பில் சென்று, வரும் 31ம் தேதிக்குள் தங்களது விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்