உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவு மறுப்பு
ராமநாதபுரம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடக்கிறது. 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினங்கள் வழங்கப்பட்டு வருகிறது.6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் செலவினங்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் செலவினத்தொகை வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.