உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் மனம் கவர்ந்த கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ

திருப்பூர்: திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில், பிரிட்ஜ்4 கனெக்ட், தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில், கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ 2024 நிகழ்ச்சி நேற்று நடந்தது. குழந்தைகள் தயாரித்திருந்த பல்வேறு பொருட்கள், அவர்களால் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.மேயர் தினேஷ்குமார், கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் தலைவர் மோகன்கார்த்திக், தெற்கு ரோட்டரி கிளப் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி விற்பனையை துவக்கி வைத்தனர். குமரன் கல்லுாரி முதல்வர் வசந்தி, விருக் ஷா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ராஜலட்சுமி, நேஷனல் சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி, பிரிட்ஜ்4கனெக்ட் இணை நிறுவனர் இந்துவெங்கட் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். 12 வயது மாணவர் சந்தோஷிவெங்கட்டின், சுற்றுச்சூழல் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் பெற்றுக்கொண்டார்.பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்கள் படைப்புக்கான அரங்குகளாக அமைத்திருந்தனர். மொத்தம், 30க்கும் மேற்பட்ட அரங்குகளில், 150 குழந்தைகள் தங்கள் விற்பனையகங்களை அமைத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்