உள்ளூர் செய்திகள்

காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி

ஸ்ரீநகர்: சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இரு நாட்கள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். ஸ்ரீநகரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 84 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் கலந்து கொண்டு , ஜம்மு - காஷ் மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். ஸ்ரீநகரில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்கிறார். அவருடன் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்