பிரெய்லி கந்த சஷ்டி கவச நுால் வெளியீடு
கோவை: யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ், பார்வையற்றோர் பயன்பெறும் வகையில், பிரெய்லி முறையில் கந்த சஷ்டி கவச நுால் வெளியிடப்பட்டது.இந்நுாலை, யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் மணிமேகலை வெளியிட்டார். பார்வையற்றோர் தேசிய இணையத்தின், கோவை கிளை கணினி மையத்திற்கு குளிர் சாதனம், இருக்கை வசதிகள் வங்கி சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டது.நிகழ்வில், வங்கி மண்டலத்தலைவர் சத்யபென் பெஹரா, பிராந்திய தலைவர் லாவண்யா, பார்வையற்றோர் தேசிய இணைய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.