மாநில பேச்சு போட்டியில் மதுரை மாணவி முதலிடம்
நாமக்கல்: கம்பன் கழகம் சார்பில், மாநில அளவிலான பேச்சுப்போட்டி நாமக்கல்லில் நேற்று நடந்தது. கம்பன் கழக தலைவர் சத்திய-மூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் அரசு பரமேஸ்வரன், பொருளாளர் தில்லை சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டி துவங்கும் முன், கம்பர் போற்றிய இயற்கை, கம்பர் காட்டும் இறைமை, கம்பர் நோக்கில் இறையாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், குலுக்கல் முறையில் வழங்கப்பட்ட தலைப்பின் கீழ், ஒவ்வொரு போட்டியாளரும், நான்கு நிமிடம் பேச அனுமதிக்கப்பட்டனர்.நடுவர்களாக கோபாலநாராயணமூர்த்தி, பாரதி, கலையரசி ஆகியோர் செயல்பட்டனர். போட்டி முடிவில், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி மாணவி சுபநிதிசுப்ரமணி முதல் பரிசு, பண்ணாரியம்மன் இன்ஜி., கல்லுாரி மாணவர் அஸ்வின் இரண்டாம் பரிசு, கோவை பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி ரேஷ்மா மூன்றாம் பரிசு பெற்றனர்.மேலும், மதுரை பாத்திமா கல்லுாரி மாணவி சுரேகா, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லுாரி மாணவி காருண்யா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்-களுக்கு, முறையே, 10,000, 5,000, 3,000 ரூபாய் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.