உள்ளூர் செய்திகள்

சென்னை ஐஐடி-ல் டிஜிட்டல் திறன்மேம்பாட்டு பயிற்சி

சென்னை: சென்னை ஐஐடி ப்ரவர்தக் டெக்னாலஜி பவுண்டேஷன் ஸ்வயம் ப்ளஸ் உடன் இணைந்து தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறை மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.இந்த பயிற்சி வகுப்பு வரும் அக்.,14ம் தேதி முதல் 26ம் தேதி வரை சென்னை ஐஐடி வளாகத்தில் நடக்கிறது. இதில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் https://iitmpravartak.org.in/digital_mfg_practice என்ற இணையதளம் வாயிலாக அக்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ.6,000 + ஜி.எஸ்.டி. பயிற்சி காலம் முடியும் வரை சென்னை ஐஐடி வளாகத்திலேயே தங்கிப் படிக்க மாணவர் ஒருவர்க்கு ஒரு நாளைக்கு ரூ.650 கட்டணம் செலுத்த வேண்டும்.இது டிஜிட்டல் உற்பத்தி குறித்த பயிற்சி என்பதால் மெக்கானிக்கல், தயாரிப்பு மற்றும் உற்பத்தி பின்புலம் இருக்கும் பொறியியல், அறிவியல், டிப்ளமோ, பட்டதாரி மாணவர்கள் மட்டுமே இதில் பயிற்சி பெற தகுதி பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3டி பிரிண்டிங், கம்ப்யூட்டர் -எய்டட் டிசைன் (சிஏடி), கம்ப்யூட்டர் -எய்டட் மேனுபாக்சரிங் (சிஏஎம்) ஆகிய பயிற்சிகளும் பெறுவார்கள்.இது குறித்து திட்டத் தலைவர் சாரதி கூறுகையில், தியரிட்டக்கல் பொறியியல் கருத்துக்கள் மற்றும் நிஜ-உலக உற்பத்தி செயல்முறைகளுக்கு இடையேயான பாகுபாட்டை பூர்த்தி செய்யும் வகையில் இத்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது, என்றார்.மேலும் விவரங்களுக்கு: https://iitmpravartak.org.in/digital_mfg_practice


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்