உள்ளூர் செய்திகள்

கிரம்ப்டனின் டெக்வித்ஹார்ட் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

மும்பை: கன்ஸ்யூமர் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனமான கிராம்ப்டன், டெக்வித்ஹார்ட் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.மும்பையில் தனது புதிய கார்பரேட் அலுவலகத்தில் இன்று நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர்கள் குழுவானது டெக்வித்ஹார்ட்-ஐ அறிமுகப்படுத்தியது.இத்தொழில்நுட்பத்தின் மூலம் அதிகப்படியான, ஆற்றல் திறன், செயல் திறன் மற்றும் நீடித்த உழைப்பை பெறக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்விசிறிகள் முதல் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் பம்ப் செட்டுகள் வரை இப்புதிய தொழில்நுட்பமானது சிறந்த பங்காற்றும். நியூக்ளியஸ் தளம், எக்ஸ்டெக் தளம், குடியிருப்பு மற்றும் வேளாண்துறை பம்புகள், சோலார் பம்புகள் ஆகியவை இப்புதிய தொழில்நுட்பத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டின் எம்.டி மற்றும் சி.இ.ஓ வான புரோமித் கோஷ் கூறுகையில், எங்கள் தயாரிப்புகளின் நீடித்த உழைப்பு மற்றும் சுலபமாக பழுது பார்க்கும் தன்மை ஆகியவற்றுக்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். பி.எல்.டி.சி தொழில்நுட்பத்துடன் இந்த டெக்வித்ஹார்ட் என்ற தொழில்நுட்பம் இணைந்து எதிர்காலத்தை நோக்கிய ஸ்மார்ட் தீர்வை வழங்குவதாக அமைந்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்