உள்ளூர் செய்திகள்

கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமே சமூகத்தின் முன்னேற்றத்துக்கு காரணம்!

பாலக்காடு: கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமே, சமூகத்தின் முன்னேற்றத்துக்கு காரணம் என, பத்மஸ்ரீ விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நூறணியில் உள்ள கல்யாண மண்டபத்தில், நூறணி கிராம சமூகம், கேரளா பிராமண சபை மற்றும் பிராமண கல்வி சங்கம் சார்பில், பத்மஸ்ரீ விருது பெற்ற உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் வைத்தியநாதன் மற்றும் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவரது மகன் ஹரீஷ் வைத்தியநாத சங்கர் ஆகியோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், கவுரவிப்பை ஏற்றுக் கொண்ட மூத்த வக்கீல் வைத்தியநாதன் பேசியதாவது:கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமே, சமூகத்தின் முன்னேற்றத்துக்கு காரணம். அதனால், கல்வியில் யாரும் பின்தங்கக்கூடாது. கற்கும் கல்வியே சுய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு அங்கீகாரமும், சமூகத்திற்கு சேர்ந்தது. சமூகத்திற்காக என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வேன். இந்த அங்கீகாரத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அரசியலமைப்பு என்ற தலைப்பில், உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் சாய் தீபக் பேசினார்.கேரளா பிராமண சபை மாநில தலைவர் கணேசன், மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் குமார், முன்னாள் மாநில தலைவர் கரிம்புழை ராமன், நூறணி கிராம சமூகம் தலைவர் சிவராமகிருஷ்ணன், பிராமண கல்வி சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் கிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்