திரைப்படத் திறனாய்வு படிப்புக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு
சென்னை: புனேவில் செயல்படும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் திரைப்படத் திறனாய்வு படிப்புக்கான விண்ணப்பம் செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.இதன் அடிப்படையில், ஜூன் 23 முதல் ஜூலை 11 வரை நடைபெறும் படிப்பிற்கான விண்ணப்பங்களை தற்போது 2025 ஜூன் 15 ஆம் தேதி மாலை 6 மணிவரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுடையவர்கள் இந்த இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLScJXSd_n0o7n5CBo6yVVRODFgQEx4AcpqeBeSIM8d1LsOJrcQ/viewform படிப்பிற்கான கட்டணம், தகுதி, கட்டணம் செலுத்தும் முறை ஆகியவை குறித்து https://ftii.ac.in/p/vtwa/film-appreciation-course-mid-year-2025-23-june-11-july-2025 என்ற இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.