உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பங்களுடன் தலைமைச் செயலகம்; மோடி பெருமிதம்!

புதுடில்லி: டில்லியில் கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில், வெளியுறவு அமைச்சகம் மற்றும் துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படும். இதனால் அமைச்சகங்களுக்கு புதிய முகவரி கிடைக்க உள்ளது.ரெய்சானா ஹில்ஸ் பகு​தி​யில் நார்த் பிளாக் மற்​றும் சவுத் பிளாக் கட்​டடங்​களில் கடந்த 90 ஆண்​டு​களாக செயல்​பட்டு வந்த மத்​திய அமைச்​சகங்​கள் மற்​றும் பிற துறை அலு​வல​கங்​கள் எல்​லாம் கர்​தவ்யா பவனில் ஒரே இடத்தில் செயல்படும்.இந்த கட்டடத்தின் சிறப்புகள் பின்வருமாறு:* 1.5 லட்​சம் சதுர மீட்​டரில் 2 தரை தளங்​கள், 7 அடுக்​கு​மாடிகளு​டன் நவீன தொழில்​நுட்​பங்​களை பயன்​படுத்தி கர்​தவ்யா பவன்​ அமைக்கப்பட்டு உள்ளது.* 30 சதவீத மின்​சார செலவை குறைக்​கும் வகை​யில் இந்த கட்​டடம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.* இந்த புதிய கட்​டடங்​கள், மத்​திய அரசு அலு​வல​கங்​களின் பராமரிப்பு செலவை குறைக்​கும்.* அதுமட்டுமின்றி பணிச் சூழல் மற்​றும் ஊழியர்​களின் நலன், சேவை ஆகிய​வற்றை மேம்​படுத்​தும்.* நவீன கட்​டடங்களுக்கு உதா​ரண​மாக தி​கழும் கர்​தவ்யா பவனில், ஊழியர்​கள் அடை​யாள அட்​டை மூலம்​ மட்​டுமே உள்​ளே நுழைய முடியும்​.புதிய கட்டடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருக்கு, இந்த கட்டடத்தில் சிறப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.கர்தவ்ய பவனில் பத்து கட்டிடங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளது. முதல் கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். கட்டுமான பணி நடந்துவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டடத்தை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கட்டிடங்கள் 6 மற்றும் 7ன் திட்டம் அக்டோபர் 2026க்குள் நிறைவடையும். முழு கட்டடமும் 2027ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்