உள்ளூர் செய்திகள்

தேசிய நுாலக வார விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்

வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய நுாலக வார விழா பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது. விழாவின் துவக்கமாக, மாணவ, மாணவியர் இடையே கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து, நாள் தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு பள்ளியில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை தமிழாசிரியர் தெய்வநாயகம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'வீட்டிலும், வெளியிடங்களிலும் மாணவர்கள் மொபைல்போனில் நேரத்தை வீணடிக்காமல், நுாலத்தில் உள்ள எண்ணற்ற நுால்களை படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பாக, செய்தி தாள்களை தவறாமல் படிக்க வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்