உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் முதல் முயற்சியை குறைகூறாமல் பாராட்ட வேண்டும்

கோவை: தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு 2025 வரைவு பாடத்திட்டம் சார்ந்த, மண்டல அளவிலான கருத்துக்கேட்புக்கூட்டம், ஜி.டி., மெட்ரிக் பள்ளியில் நடந்தது.இதில் மாநில கலைத்திட்ட வடிவமைப்புக் குழு மாநில திட்டக்குழு உறுப்பினரும், பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில் பேசியதாவது:மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடத்திட்டம் அமைய வேண்டும். வீடுகளில் நாம் தமிழ் அல்லது ஆங்கிலம் பேசும்போது, அதில் பல வார்த்தைகளில் இலக்கண பிழை இருக்கும். அதை நாம் பொருட்படுத்துவதில்லை.அது போலத் தான் நாம் வகுப்பறையில் ஆங்கிலம் பேசும் போதும், சில சொல்லாடல்களில் இலக்கண பிழை இருக்கும்; அதை பெரிதுபடுத்தக்கூடாது. முதலில் நம் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும். அதன் பின் இலக்கண பிழைகளை சரிசெய்து கொள்ளலாம். மாணவர்களின் முதல் முயற்சிகளை ஆசிரியர்கள் தடுக்கவோ, குறை கூறவோ கூடாது. பாராட்ட வேண்டும். அதன் பின் தவறை சுட்டிக்காட்டி இலக்கணத்தை கற்றுக்கொடுத்து பிழைகளை சரிசெய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கோவை கலெக்டர் பவன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் புகழேந்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்