காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு
புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்துறை தர உறுதி அணி மற்றும் நிறுவனத்தின் புதுமை கவுன்சில் சார்பில் 'அணு மற்றும் பிளாஸ்மா இயற்பியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஒரு நாள் தேசிய மாநாடு' நடந்தது.இயற்பியல் துறை தலைவர் இளங்கோவன் வரவேற்றார். ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் சுரஜ் குமார் சின்ஹா கலந்து கொண்டு 'பிளாஸ்மா மெட்டல் சந்திப்பு அதிவேக செயலாக்கத்திற்கான ஒரு புதிய அடிப்படை கருவி' என்ற தலைப்பில் சொற்பொழிவு வழங்கினார். பின், இயற்பியலின் மேம்பட்ட பயன்பாடுகளின் மூலம் உருவாக்கப்படும் இயற்கை உரங்கள் மூலம் வேளாண்மை துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உலகளாவிய வேளாண்மையை மேம்படுத்த முடியும். இதை அடைவதற்கான ஆராய்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது' என்றார்.டாக்டர் பீர் பிக்ரம் சிங் கிளஸ்டர் கதிரியக்க இயக்கவியல் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மாணவர்களின் புதுமையான யோசனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சிறந்த சிறந்த மதிப்பாய்வுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநாட்டில் ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இணை பேராசிரியர் பெரியாண்டி நன்றி கூறினார்.