உள்ளூர் செய்திகள்

அரசு தொடக்க பள்ளிக்கு மாநில சுற்றுச்சூழல் விருது

கரூர்: மாநில அளவில், சுற்றுச்சூழல் துறை சார்பில் விருது பெற்ற மணவாசி அரசு பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் வாழ்த்து பெற்றார்.தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் 2024ம் ஆண்டில் சீரிய பணியாற்றியமைக்கு மாநில அளவில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 3வது இடம் பெற்றது. இதற்கான, தமிழக அரசு சார்பில் விருது மற்றும் 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரியை தேன்மொழி, கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்சண்முகவேலுவிடம் வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்