உள்ளூர் செய்திகள்

தர்மபுரியில் இளைஞர்கள் பங்கேற்ற வளர்ச்சியடைந்த இந்தியா நிகழ்ச்சி

தர்மபுரி: தர்மபுரியில் இரு இடங்களில், 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற நிகழ்ச்சி இளைஞர்களின் சிலம்ப நிகழ்ச்சியுடன் நடந்தது.'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற உறுதிமொழி ஏற்பு மற்றும் பிரதமர் மோடியின் காணொளியும் நேற்று ஒளிபரப்பப்பட்டது. போதையில்லா நாட்டை உருவாக்கும் நோக்கத்தில், நாடு முழுவதும், ஒரு கோடி இளைஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தர்மபுரி மாவட்ட 'மை பாரத் கேந்திரா' மற்றும் கலைத்தாய் சிலம்பம் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து இந்த நிகழ்ச்சியை, இலக்கியம்பட்டியிலுள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதமர் உரையை காணொளியில் கண்டனர். கலைத்தாய் சிலம்பம் பயிற்சி பள்ளி இயக்குனர் மணிகண்டன் தலைமை வகித்தார். கலைத்தாய் சிலம்பம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் விக்னேஷ்வரி வரவேற்றார். தர்மபுரி மாவட்ட, 'மை பாரத் கேந்திரா'வின் மாவட்ட இளைஞர் அலுவலர் சிவசண்முகம் நிகழ்ச்சி குறித்து பேசினார்.இதில், இளைஞர்கள், மல்லர் கம்பம், சிலம்பம், சுருள் போன்ற தமிழர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் 'போதை இல்லாத இந்தியா' என்ற தலைப்பிலும் பேசினர். அதே போல, தர்மபுரி, அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லுாரியிலும் இந்நிகழ்ச்சி நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பிரதமர் மோடி உரையை காணொளி மூலம் கண்டுகளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலைத்தாய் சிலம்பம் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்