குடியரசு தின அணிவகுப்பு கல்லுாரி மாணவர்கள் தேர்வு
வால்பாறை: புதுடில்லியில் நடக்கும் குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்க, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரி நாட்டுந லப்பணி திட்டம் மாணவர்கள் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் நிசான் (பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு), புதுடில்லியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பயிற்சி விவேகானந்தா கலை அறிவியல் கல்லுாரியில், வரும், 23ம் தேதி முதல் டிச., 2ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்கிறார்.இதே போல், நாட்டுநலப்பணி திட்ட மாணவி நிசாந்தினி (பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு) குஜராத் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரில் நடைபெறும் தேசிய ஒருமை பாட்டு முகாமில் கல்லுாரியின் சார்பில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.இந்த இரண்டு மாணவர்களையும், கல்லுாரி முதல்வர் ஷீலாபானு மற்றும் போராசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.