உள்ளூர் செய்திகள்

கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைய வேண்டும்: காஷ்மீர் கவர்னர்

மாநிலம் முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் கவர்னர் என்.என்.வோரா தெரிவித்தார். இத்தகைய ஒத்துழைப்பின் மூலமாக கல்வித் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாது, கற்பித்தலின் தரத்தையும் மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். கே.சி. பப்ளிக் பள்ளியில் நடந்த விழாவில் பேசிய அவர் இதை தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பானது, ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்கே நன்மை பயக்கக் கூடியது என்ற அவர், கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயலாற்றும் விதத்தில், அவற்றுக்கு தேவையான அனைத்து வளங்களும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் நகர்புறத்தில் நல்ல வசதியுடன் இருக்கும் பள்ளிகள், கிராம பகுதிகளின் முன்னேற்றத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்